தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், அனைத்தும் நிறைவேறும்- சசிகலா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமானையும், விஜயாபதி ஸ்ரீ விஸ்வாமித்திரரையும், இலஞ்சி ஸ்ரீ இலஞ்சிக்குமாரரையும் வழிபாடு செய்ய இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் இயக்கத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர், சிறப்பாக வழிநடத்திய ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வழியில் அதே மக்களாட்சியை மீண்டும் அமைத்து “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை மனதில் வைத்து, தமிழக மக்களின் நலன் காப்பாற்றப்படும் என்று மனம் நிறைந்து சொல்கிறேன். இது உறுதி.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்