மூட்டு பலமாக இருக்க இந்த அற்புத பானத்தை மட்டும் குடிக்க!

50 சதவீதத்திற்கும் மேல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு காரணம் உடல் பருமன் தான். தலை முதல் தொடை வர உள்ள மொத்த பாரங்களும் மூட்டின் மீது குவிவதால், மூட்டு வலி உண்டாகி இறுதியில் தேய்மானத்திற்கு வழிவகுக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் மூட்டுவலியிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பானத்தை மட்டும் பருகினாலே போதும். தற்போது அந்த அற்புத பானத்தையும் மூட்டுவலி வந்தவர்கள் , சாப்பிட வேண்டிய உணவுகளையும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றியும் இங்கு பார்ப்போம். வேக வைத்த ஓட்ஸ் – 1கப் நீர் – 1கப் அன்னாசி சாறு – 1 கப் ஆரஞ்சு சாறு – 1 கப் தேன்- 2 ஸ்பூன் பட்டைப் பொடி – 1 ஸ்பூன். முதலில் மேற்கூறிய எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் நன்றாக அடித்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை மூன்று சம அளவாக பிரித்து காலை, மதியம், இரவு என குடித்தால் உங்கள் மூட்டு பலம் பெறும். பிற்காலத்தில் மூட்டு வலி வராது. சோள எண்ணெயில் அதிக ஒமேகா 3 அமிலம் இருப்பதால் அவை மூட்டு வலியை இன்னும் அதிகரிக்கச் செய்திடும். ஆகவே சோள எண்ணெயை பயன்படுத்துவதை தவிருங்கள் தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும். கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும். பர்க்கோலி, எள்ளு, வெங்காயம், அனைத்துவித கீரைகள், எண்ணெய், பால் வகைகள், போன்றவை உங்கள் மூட்டு மற்றும் மூட்டு இணைப்புகளை பலப்படுத்தும் உணவுகள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.