உடல் எடையை குறைக்கணுமா? இந்த வகை வாழைப்பழம் சாப்பிடுங்க…

வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிலரும், குறையும் என்று சிலரும் கூறும் நிலையில், எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்ட வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம். எல்லா வகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வகை வாழைப்பழங்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சில வகை வாழைப்பழங்கள் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும், ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரி உள்ளது. இது 18 கிராம் கார்போஹைட்ரேட்டிற்கு சமமானது. மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின், தாதுப் பொருட்கள் உள்ளன.செவ்வாழை, பூவம் பழம், கற்பூரவள்ளி, மொந்தம் பழம் ஆகிய வாழைப்பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இவற்றில் உள்ள அதிகளவு B6 மற்றும் நார்சத்து இருப்பதனால் இவைகள் உடலில் கொழுப்புகளை குறைக்கும். மலை வாழைப்பழம், நேந்திரம் பழம் ஆகியவற்றில் அதிக அளவு, அதாவது 10 சதவிதம் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. எனவே, உடல் எடையை அதிகரிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பழங்களில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ், கிளைகோஜனாக மாற்றப்பட்டு தசைகளில் சேமிக்கும் போது, தசைகளுக்கு வலிமை கிடைக்கும். இதனால் உடல் எடை கூடும். மேலும் இவற்றை மில்க் ஷேக் அல்லது சேலட்டாக சாப்பிட்டாலும் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.