ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் இரவு 7.30 மணிக்கு ஈஸ்ட் பெங்கால் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதுகின்றன. மேலும் இரவு 9.30 மணிக்கு ஐதராபாத் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

ஈஸ்ட் பெங்கால் அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 1 வெற்றி, 8 டிரா, 10 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 7 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி என புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 10 வெற்றி, 7 டிரா, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 19 போட்டிகளில் 9 வெற்றி, 4 டிரா, 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.