மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் – சு.வெங்கடேசன் எம்.பி…
சென்னை: மகளிருக்கு எல்லா அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறைகள் அமைக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி வட்டார அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சு. வெங்கடேசன் எம். பி கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 25, 2022 அன்று நான் ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு மகளிர் ஊழியர்களுக்கு எல்லா ஸ்டேட் வங்கி அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறை உறுதி செய்யப்பட வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.