ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்திலும் பங்கேற்கவில்லை
உக்ரைன் போரில் ரஷ்ய படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி மனித உரிமைகளை மீறி வருவதை கண்டித்து, ஐநா மனித .உரிமை கவுன்சிலில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலும், இந்தியா பங்கேற்கவில்லை. 32 நாடுகள் ஆதரித்து வாக்களித்ததை தொடர்ந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கார்கிவ், சுமி நகரங்களில் இந்திய மாணவர்கள் தவிப்பு
ரஷ்யாவின் கார்கிவ், சுமி நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக, இந்த நகரங்களில் படித்து வரும் இந்திய மாணவர்கள், பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற மாணவர்களை போல் இவர்களால் அண்டை நாடுகளின் மேற்கு எல்லைக்கு வர முடியவில்லை. எனவே, இவர்களை மீட்பதற்காக இந்திய ராணுவம் 2 ஐஎல்-76 என்ற விமானப்படையின் சரக்கு விமானங்களை தயார்நிலையில் வைத்துள்ளது. ரஷ்ய படைகளின் உதவியுடன் இவர்களை மாஸ்கோவுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து மீட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரஷ்ய அரசுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.
