ஸ்டாலினுக்கு இரவில் வந்த போன் கால்….

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் பார்த்த உள்ளடி வேலைகள் குறித்து ஸ்டாலினுக்கு தெரியவந்துள்ளதால் மாவட்ட செயலாளரையே மாற்றியுள்ளார். மேயர் வேட்பாளர் மகேஷ் முதல்வர் ஸ்டாலின் எண்ணுக்கு தொடர்பு கொண்டாராம்.  மகேஷ் குறித்த அறிமுகம் ஸ்டாலினுக்கு இருந்ததால் என்ன விவரம் என கேட்டுள்ளார். அப்போதுதான் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் குறித்து கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள் என கூறியுள்ளார். அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது என ஸ்டாலின் அவருக்கு சமாதானம் சொல்லியுள்ளார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.