உடலுக்கு குளிர்ச்சி தரும் கற்றாழை மோர்!!!!!!

உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் மற்றும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் – அரை கப்

கற்றாழை – 4 சிறு துண்டுகள்
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காய தூள் – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கற்றாழையின் தோல் பகுதியை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

மிக்ஸியில் இஞ்சித்துண்டை போட்டு அரைத்த பின்னர் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).

இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.

சூப்பரான கற்றாழை மோர் ரெடி.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published.