ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் காலமானார்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 74 ஆகும்.
கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் மார்ஷ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராட் மார்ஷ் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், இடது கை பேட்ஸ்மேனுமான ராட் மார்ஷ், 1970 மற்றும் 1984 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 பேரை ஆட்டமிழக்கச் செய்தார். அந்த நேரத்தில் அது ஒரு உலக சாதனை ஆகும். மேலும் ராட் மார்ஷ் மூன்று டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.