தூத்துக்குடியில் ரூ.1000 கோடி செலவில் ஃபர்னிச்சர் பூங்கா!!!
தூத்துக்குடியில் ரூ 1000 கோடியில் அமைக்கப்பட உள்ள பர்னிச்சர் பூங்காவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7 ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த பூங்கா அமைப்பதற்காக சிப்காட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அறைகலன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 7-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்