மறைமுக தேர்தல்; பல இடங்களில் பிரச்னை – தேர்தல் ஒத்திவைப்பு!!!
சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று (மார்ச் 4) நடக்கிறது. இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. சில இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், குற்றாலம் பேரூராட்சி, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்தல் உள்ளிட்ட சில தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.