புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ்..
சென்னை : புதிய கல்வி கொள்கைப்படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு, தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்ற, அரசின் நிலைப்பாடு உள்ளதால், கூடுதலாக நடத்தப்படும் தொழிற்கல்வி பாடத்துக்கான மதிப்பெண்ணை, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.