ஓம் பிர்லாவுடன் சந்திப்பு: உத்தரவிட்டார் ஸ்டாலின்…
சென்னை : லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற, மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் கோவை வந்திருந்தார். அவரது சென்னை வருகை குறித்த தகவல் அறிந்த, முதல்வர் ஸ்டாலின், டி.ஆர். பாலு, தயாநிதி உள்ளிட்டோரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். ‘அவரை பார்க்க செல்கிறீர்களா’ என்றும் கேட்டுள்ளார். அதற்கு அவர்களிடம் பதில் இல்லாததால், ‘லோக்சபா எம்.பி.,யாக இருக்கும் நீங்கள், சபாநாயகர் சென்னை வரும் போது சந்திக்காமல் இருப்பது சரியா’ என கேட்டு, சபாநாயகரை சந்திக்குமாறு கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.