பிணைக் கைதிகளாக இந்திய மாணவர்கள்?..வெளியுறவு துறை மறுப்பு
உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் யாரும் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என்று வெளியுறவு துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கிருந்து மாணவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்கும்படி உக்ரைனுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை உக்ரைன் ராணுவத்தினர் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.