ஜெஇஇ தேர்வு தேதி அறிவிப்பு!!!!!!!
புதுடெல்லி: தேசிய அளவிலான என்ஐடி, ஐஐடி மற்றும் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜெஇஇ என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தகுதி தேர்வு நடத்துகிறது. இந்தாண்டு பிரதான தேர்வு (மெயின்) 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, ஜெஇஇ மெயின் முதல் கட்டத் தேர்வு வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையிலும், 2ம் கட்டத் தேர்வு மே மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.