ஸ்தம்பித்து நின்ற சேலம் ஆட்சியர் அலுவலகம்!!!
மயானம் செல்லும் வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடமிருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இங்கு உள்ளவர்கள் இறந்தால் இறுதி சடங்கிற்கு எடுத்துச்செல்லும் மயான வழித்தடம் ஓன்று உள்ளது.அந்த வழித்தடத்தை அப்பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மற்றும் வெள்ளையன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மயானம் செல்லும் வழித்தடம் மற்றும் கோவில் திருவிழாவிற்கு செல்லும் வழித்தடத்தை மீட்டுத்தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி