ஜாமின் மனு: முன்னாள் அமைச்சருக்கு கோர்ட் ஷாக்!!!

அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை’ எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் மனுவில் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்தனர்.ஜெயக்குமாரின் மனுவை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.