சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்த துர்கா ஸ்டாலின்..

மயிலாப்பூரில் அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி விழாவை முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

Leave a Reply

Your email address will not be published.