தங்கம் விலை கிடுகிடு உயர்வு!!!

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக உக்ரைன் – ரஷிய போர் காரணமாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும்அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.616 உயர்ந்து ரூ.39,000-க்கு விற்பனை ஆகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கம் ரூ.77 உயர்ந்து ரூ.4,875 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி

Leave a Reply

Your email address will not be published.