பித்தன் பிறைசூடிய எம்பெருமான் மகேஸ்வரனின் மகாசிவராத்திரி!!!!!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி….
2022 மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை நாள் முழுவதும் விரதமிருந்து, இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகள் நடைபெறும்..
வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் சிவதத்துவம்…
அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சி என்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் வருவதற்கு முன்பே நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயங்களும் சூட்சமமாக நமக்கு சொல்லி வைத்து விட்டு சென்றுள்ளார்கள் அதை புரிந்து கொள்ளாமல் நாத்திக நாமத்தை உச்சரித்து நாம் வாழ்க்கை நல்ல நிலையில் இருந்து பலகாலம் விலகிச் சென்று கொண்டே இருக்கிறது.
சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும் காலகட்டம் தான் அம்மாவாசை என்று குறிப்பிடுகிறார்கள்..
அதாவது வானியல் புதிய நிலவு, சில நேரங்களில் குழப்பத்தைத் தவிர்க்க இருண்ட நிலவு என்று அழைக்கப்படுகிறது , சந்திரன் பூமியிலிருந்து கண்ணுக்கு தெரியாத சூரியனுடன் கிரகண தீர்க்கரேகையில் இணைந்த தருணத்தில் வரையறையின்படி நிகழ்கிறது. இந்த தருணம் தனித்துவமானது மற்றும் இருப்பிடத்தை சார்ந்தது அல்ல, சில சூழ்நிலைகளில் இது சூரிய கிரகணத்துடன் ஒத்துப்போகிறது .
இந்தக் காலகட்டத்தில் பஞ்சபூதங்களில் பலவிதமான மாற்றங்கள் இயல்பாக ஏற்படுகிறது
அதாவது பஞ்சபூதங்கள் தங்களது இயல்பான கட்டுப்பாட்டிலிருந்து சற்று தடுமாறுகிறது..
மிக எளிதாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்…
சூரியன் சந்திரன் பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும் காலகட்டத்தில்
“லூமினிபெரஸ் ஈதர்” ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி…. பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து அதற்கு ஒரு தனித்தன்மையை ஊட்டுகிறது.
பொதுவாகவே ஆலிங்கனம் அதாவது அன்புடன் அரவணைப்பது அந்த அணைப்பில் ஏற்படும் அற்புத நிகழ்வுகள் விஞ்ஞானப்பூர்வமானவை மிக எளிமையாக சொல்வதென்றால் கட்டிப்பிடி வைத்தியம் என்பார்களே அதுதான் இது
லூமினிபெரஸ் ஈதர்…எனும் ஈசனின் சக்தி மேலும் அது மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி அன்று மிகவும் நெருக்கமாக பலம் கொண்ட மகா சக்தியாக உருவாகி உயிரினங்களை அரவணைக்கிறது அந்த நேரத்தில் பலவிதமான இயல்பு நிலை மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு
பொதுவாகவே அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் கங்கை பொங்குவது உண்டு.
நீங்கள் கடற்கரையில் நின்று பார்த்தால் கடலில் அலைகளின் சீற்றம் நமக்கு நன்கு புலப்படுத்தும்..
மனநிலை குன்றியவர்களை பித்தர்கள் அதாவது பைத்தியக்காரர்கள் என்று குறிப்பிடுவார்கள் அவர்களது மனநிலை மிகவும் அலை வாய்ந்ததாக இருக்கும்…
இந்த தடுமாற்றங்களை எல்லாம் தாங்கிப்பிடிக்கும் வல்லமையை உணர்த்துவதாக தான் சிவபெருமானின் ஜடா முடியில் பொங்கும் கங்கை, புது நிலா என்னும் பிறை நிலவும் சூடிய பிம்பத்தை நமக்கு நமது முன்னோர்கள் பதிவுசெய்து இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது
பித்தா (பைத்தியக்காரன் அல்லது சித்தன்) பிறைசூடிய பெருமானே
சவ ஆசனத்தில் சிவமாய் வீற்றிருக்கும் ஈசனிடம் இரண்டறக் கலந்த மகா சக்தி தேவியும் சர்வ வல்லமை பெற்ற மகா கணபதியும், மால் மருகன் முருகன்
இந்த நால்வரின் குணா அதிசயங்களும் வெவ்வேறானவை அதுபோலவே இவர்களது வாகனங்களும் வெவ்வேறான குணாதிசயங்களை கொண்டவையே அதுபோக அங்கு படைக்கப்பட்டிருக்கும் நெய் வேதங்களும் ஒவ்வொன்றும் வித்தியாசமான வையே
ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இருந்தாலும் அங்கு நிலவுவது ஏகாந்தமான அமைதி அமைதி இதுவே சிவ தத்துவத்தின் சூட்சமம்
அறிவியல் விஞ்ஞானத்தோடு சிவ தத்துவத்தை உற்றுநோக்கும் போது நமக்கு புலப்படாத ஆயிரக்கணக்கான அதிசய உண்மைகள் தெளிவு பெற்றுக் கொண்டே இருக்கும்
நீங்களும் இந்த மகா சிவராத்திரி புண்ணிய நாளில் தியானத்தில் அமர்ந்து சிவகணங்களை அதன் குணங்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து பாருங்கள் உண்மை நிலை புரியும்
தெளிவாக கூற வேண்டுமென்றால் பசுவுக்கும் சிங்கத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் மயிலுக்கும் பாம்புக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் பாம்புக்கும் எலிக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் அங்கு படைக்கப்பட்டிருக்கும் தெய்வங்களுக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் இப்படியாக மகா தேவனே சுற்றி இருப்பவற்றை மட்டும் இந்த மகாசவராத்திரியில் சிந்தித்துப் பாருங்கள் போதும். தகவல் தொகுப்பு:- சங்கரமூர்த்தி.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சங்கரமூர்த்தி.