உக்ரைனில் உயிரிழந்த பின்னும் 28 முறை உடலில் கொரோனா தொற்று உறுதி!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இத்தாலிய கடற்கரையில் தனது நண்பருடன் நீந்தி குளிக்க சென்றுள்ளார்.  எனினும், இதில் அவர் காணாமல் போயுள்ளார்.  16 மணிநேரத்திற்கு பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  கடலில் நீந்த சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
இதன்பின் உடலில், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  இதில், 28 முறை அவரது உடலில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  உயிரிழப்பதற்கு முன் அவர், முழு அளவில் அறிகுறியற்றவராகவே இருந்துள்ளார் என இறப்பு பதிவு அறிக்கை தெரிவிக்கிறது.  குறைந்த அளவில் வைரசானது பாதித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த அறிக்கையில், உண்மையில் 41 நாட்கள் கடந்த பின்பும், மனித ஆர்.என்.ஏ.வானது பரிசோதனையில் அறியப்படவில்லை.  இதற்கு, கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது என்று பொருள்.  மனித செல்களை கண்டறிய முடியாத நிலை இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு, இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆய்வாளர்கள், உயிரிழந்த 50 வயது நபருக்கு 27 நாட்களாக நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது.  இதனால், உயிரிழந்த பின்னரும் உடலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.