ஸ்டாலினின் 69வது பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து!!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 69வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.