தூங்கா நகரமாக மாறுகிறது கோவை!!!
கோவை: ஓட்டல்கள், உணவுக் கடைகள் மற்றும் பேக்கரிகள் மூடும் நேரத்தை உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனற, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பால், கோவை மாநகரம் துாங்கா நகரமாக மாற உள்ளது. ஊரடங்கு காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓட்டல்கள் சரி வர செயல்படவில்லை. இதனால் உணவக உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடரக்கூடாது. உணவகங்கள்மற்றும் ஓட்டல்கள் மூடும் நேரத்தை, உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம் என, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.