மேயர், துணை மேயர் பதவிக்கு 4ம் தேதி தேர்தல்…
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு கவுன்சிலர்கள் நாளை பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளனர். மூன்று மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் யார் என்பதை தி.மு.க., தலைமை ஓரிரு நாட்களில் அறிவிக்க உள்ளது; 4ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.