மஹா சிவராத்திரி: குமரியில் சிவாலய ஓட்டம்!!!
மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று துவங்கியது. விடிய விடிய ஓடி பக்தர்கள் 12 சிவாலயங்களை வழிபடுகின்றனர். சிவராத்திரியில் இரவு துாங்காமல் சிவனை வழிபடுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்காடு தாலுகாவில் உள்ள 12 சிவன் கோயில்களுக்கு பக்தர்கள் ஓடி சென்று வழிபடுகின்றனர். திருமலை மகாதேவர் கோயிலில் துவங்கி திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர், திருநந்திக்கரை சிவன், பொன்மனை தீம்புலாங்கடி மகாதேவர், பன்னிப்பாகம் சிவன், கல்குளம் நீலகண்ட சுவாமி, மேலாங்கோடு சிவன், திருவிடைக்கோடு மகாதேவர், திருவிதாங்கோடு சிவன், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில்களில் வணங்கி விட்டு திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்வர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்,