சிவகாசியில் காவல்துறை எச்சரிக்கை !!!!
சிவகாசி பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொிவித்துள்ளார். இதில் பட்டாசு உற்பத்தி செய்ய தேவையான முக்கிய மூலப் பொருள் பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பை உற்பத்தி பயன்படுத்தக்கூடாது ,சரவெடி தயாரிக்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தியில் தொய்வு நிலை ஏற்பட்டு பட்டாசு தொழில் மற்றும் அதன் சார்பு தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள பட்சத்தில், லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநில அரசு அலுவலர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.