தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்!!!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு,
ஐயா,
தற்பொழுது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவு முறை சரிவர செயல்படாத நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிறைய சிக்கலும் காலதாமதமும் உணவு பொருள் வழங்கல் சம்பந்தமாக ஏற்படுகிறது.இந்த முறையை தவிர்த்து நேரடியாக குடும்ப அடையாள அட்டையை ஸ்கேன் செய்து நியாயவிலை கடைகளில் பொருள்கள் வழங்கும் முறையை மாற்றி அமைத்தால் அது மக்கள் நலனில் அக்கறை உள்ள தங்களுடைய அரசுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை மனநிறைவை சந்தோசத்தை கொடுக்கும் என்பது பொது மக்களுடைய அன்பார்ந்த வேண்டுகோள். இதனை அரசு பரிசீலித்து நிறைவேற்றும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த வேண்டுகோள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.
தலைவர் தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்டம்.