முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் நெருக்கடி!!!
முதல்வர் ஸ்டாலினுக்கு வந்துள்ள திடீர் நெருக்கடியை பார்த்து தமிழக அரசு அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துப்போய் உள்ளனர். குலசேகரம் அருகே செருப்பாலூர், முள்ளம்பாறை விளையை சேர்ந்தவர் சேகர் (49). பெயிண்டர். இவர், வளைகுடா நாடான ஓமனில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். ஓமனில் வேலை செய்து வந்த சேகர் கடந்த 17ம் தேதி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. சேகர் உயிர் இழந்து 10 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் இதுவரையிலும் அவரது உடலை சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு கொண்டு வரமுடியாத சூழல் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேகர் மனைவி மேரி எஸ்கலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.