நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகம்!!!

புழல் அருகே நீர்நிலையில் கட்டப்பட்ட  அம்மா உணவகம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்   இடிக்கப்பட்டதால் மாநகராட்சி அதிகாரிகளை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அம்மா உணவகம் ஒன்றைரை  ஏக்கர் பரப்பளவு கொண்ட   பரப்பன்குளம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகள் வழக்கு தொடர்ந்தனர். இதனை அகற்ற கடந்த 10ம் தேதி உயர் நீதிமன்றம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டிருந்தது.  அதன்படி மாதவரம் மண்டல அலுவலக அதிகாரி முருகன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள்  நேற்றிரவு திடீரென பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.

Leave a Reply

Your email address will not be published.