ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம்: உக்ரைன் அரசு
கியூ: உக்ரைனில் இன்று 3வது நாளாக ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து வருகிறது. பலத்த சப்தத்துடன் குண்டுகள் வெடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் யாரும் அருகில் உள்ள பிற நாட்டு எல்லைக்கு வர வேண்டாம் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய ஜெட் விமானங்கள் 14 சுட்டு வீழ்த்தி உள்ளோம். இது வரை 3, 500 வீரர்களை கொன்று விட்டோம் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் தங்களின் ஆயுதங்களை கீழே போட மாட்டோம் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.