கொரோனா தொற்றுக்கு தாவரத்தில் இருந்து தடுப்பூசி

டொரோன்டோ : கொரோனா பரவலை தடுக்க தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உலகிலேயே முதன் முறையாக கனடா அங்கீகரித்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன் வாயிலாக உலகிலேயே தாவர தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை கனடா பெற்றுள்ளது. இது குறித்து கனடா அரசின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:கனடாவை சேர்ந்த ‘மெடிகாகோ’ நிறுவனம் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ள தடுப்பூசியை 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு இரண்டு ‘டோஸ்’ செலுத்தலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.