சரிவை நோக்கி திருமூர்த்தி அணை நீர்மட்டம்!!!
மெக்கா தொட்டி என்றழைக்கப்படும் திருமூர்த்தி அணைக்கு வால்பாறை அருகே உள்ள அப்பர் நீராறு உள்ளிட்ட பிஏபி பாசனத் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காண்டூர் கால்வாய் வழியாக 50 கிலோ மீட்டருக்கு மேலான தொலைவில் தண்ணீர் திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. இருப்பினும் கோடைகாலம் துவங்கியதால் பிஏபி அணைகளில் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதனால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்கள் வரும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.