அரவக்குறிச்சி பகுதியில் தெருநாய் தொல்லை- மக்கள் அவதி…
அரவக்குறிச்சி பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவில் வருபவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் கருத்தடைமுகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி தர்ஹாதெரு, மாரியம்மன் கோவில் தெரு, அம்மன்நகர், பள்ளிவாசல் தெரு, கலைவாணர் தெரு பாவாநகர் பொன்நகர், மார்கெட் தெரு. சுப்ரமணிசுவாமி கோவில் பின்புறம், பெரியகடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைக்கு ஆளாகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.