கொரோனாவை கட்டுப்படுத்தும் கண்டங்கத்திரி!!!

கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும். நம்முடைய உடல் நலத்துக்கு மிகவும் உறுதுணையாக விளங்குகிற கண்டங்கத்திரி, பேரின வகையில் தக்காளி இனத்தையும், செடி வரிசையில் கத்திரி வகையையும் சார்ந்தது என தாவரவியலாளர்கள் வகைப்படுத்துகிறார்கள். கண்டங்கத்திரியின் இலைகள் முழுவதும் வரியோட்டமாக நரம்புகள் போல் காணப்படும்.  இதன் முட்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண்டங்
கத்திரியின் பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில் காணப்படும். கத்திரி வகை செடி என்பதால் அந்தக் காயினுள் இருப்பதைப் போன்று, இதன் உட்புறத்திலும் வெளிர் மஞ்சள் அல்லது வெள்ளை நிற விதைகள் அதிகளவில் காணப்படும். பாரம்பரிய மருத்துவத் துறைகளான சித்தம், ஆயுர்வேதம் போன்றவற்றில் ‘கண்டம்’ என்ற சொல்லுக்குத் ‘தொண்டை’ என பொருள். மேலும்,
‘கண்டம்’ என்பதற்கு ‘முள்’ என்கிற வேறொரு அர்த்தமும் கூறப்படு கிறது. அதனடிப்படையில், தொண்டையில் நமக்கு ஏற்படுகிற எரிச்சல், வலி, கமறல் (தொண்டை கட்டுதல்) முதலான பாதிப்புகளை இம்மூலிகை குணப்படுத்துவதால், இம்மூலிகைக்குக் கண்டங்கத்திரி’ என்ற பெயர் வந்தது.பெரிய சுண்டை, கசங்கி போன்ற வேறு பெயர்களாலும் கண்டங்கத்திரி அழைக்கப்படுகிறது. Solanum Xanthocarpum என்ற தாவரவியலில்
சுட்டப்படுகிற கண்டங்கத்திரி, Yellow Fruit Nightshade எனவும் குறிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி ஏராளமாகக் கொண்டுள்ள கண்டங்கத்திரிக்கு, தொண்டையில் நுழைந்து நம்முடைய உயிரைப் பறிக்கும் கொரோனா வைரஸைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதனுடைய பழங்கள் மற்றும் தண்டுகள் நமது உடலில், பலவிதமான நோய்களை உருவாக்கும் எண்ணற்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்டவை.கண்டங்கத்திரி இலையை நன்றாகப் பொடியாக்கி, அதே அளவு சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து, மார்பில் பூசி வர, வாத நோய்கள் குணமாகும். பொதுவாகவே, முட்கள் நிறைந்த மூலிகைகளுக்குச் சளி பிடித்தல், மூக்கடைப்பு ஆகிய சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு.கண்டங்கத்திரி இலையுடன் சிறிதளவு தூதுவளை, ஆடாதொடை இலைகளைச் சேர்த்து நன்றாக வெயிலில் காய வைத்து, தூளாக்கி, தினமும் ஒரு வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், கொரோனா வைரஸ் உண்டாக்கும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விரைவில் குணமாகும்.மேலும் பலவிதமான நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் Anti-asthmatic தன்மை கொண்டது. நாள்பட்ட காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிலிருந்து மீள, கண்டங்கத்திரியின் வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம் கொத்தமல்லி ஒரு பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு, அரை லிட்டர் அளவுக்குக் காய்ச்சி, தினமும் 4-முதல் 6 முறை 100 மி.லி. அருந்தி வர, கொரோனா உட்பட பலவிதமான ஜுரத்தில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம். நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளும் சரியாகும்.தோல் எரிச்சல், வியர்வையால் ஏற்படுகிற நாற்றம் ஆகியவை குணமாக தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கண்டங்கத்திரி இலையைப் போட்டு, காய்ச்சி உடலில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.இருமல், மார்புச்சளி போன்றவற்றால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இதன் காய், பழம் ஆகியவற்றை நசுக்கி, தேனுடன் கலந்து கொடுக்க விரைவில் குணம் அடைவார்கள். Flu முதலான விஷக் காய்ச்சலும் சரியாகும்.கண்டங்கத்திரி இலையைச் சாறாக்கி, அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால், பல நாளாக உள்ள வெடிப்பும் விரைவில் குணமாகும். இதில் Urolithiatic தன்மை உள்ளதால், இதன் சாறை ஒன்றரை தேக்கரண்டி தினமும் குடித்தால், சிறுநீர் எரிச்சல், தொற்று, கடுப்பு ஆகியவை நீங்கும். கண்டங்கத்திரி ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு இருந்தாலும், பாரம்பரிய முறையில் வைத்தியம் செய்யும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இதனை உட்கொள்ளக் கூடாது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

Leave a Reply

Your email address will not be published.