லிதுவேனியாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம்
உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷிய ராணுவம் தொடர்ந்து 2-வது நாளாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ்வில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவா்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து செல்போன் விளக்குகளை ஒளிர செய்து லூதுவேனியா மக்கள் போராட்டம் நடத்தினர். செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.