2-வது நாளாக தொடரும் போர்…. பதுங்கு குழிகளில் தமிழக மாணவர்கள் தஞ்சம்…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் 2-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் அருகேயுள்ள வினிட்சியா பல்கலைக்கழக மாணவர்கள் சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.