பிரான்ஸிடமிருந்து இந்தியா வந்த 3 ரபேல் விமானம்.. இதுவரை 35 விமானங்கள் வந்துள்ளன – மத்திய அரசு

பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016 ஆம் ஆண்டில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண் டது. அதன்படி 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு பல குழுக்களாக ரபேல் விமானங்களை பெற்ற நிலையில் , பிரான்ஸ் விமான படை தளத்தில் இருந்து கிளம்பிய மேலும் 3 விமானங்கள் நேரடியாக நேற்று இந்தியா வந்து சேர்ந்தன. அங்கிருந்து இடைநில்லாமல் பறந்து வந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக விமானப்படை நடுவானில் எரிப்பொருள் நிரப்பியது. ஒப்பந்தப்படி இதுவரை விமானங்களை பெற்ற கடைசி விமானம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் இந்தியா வந்தடையும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.