பிரதமர் மோடி தலையிட வேண்டும் – உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்
கியூ: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கொத்துக்குண்டுகளால் தாக்கி வருகிறது. இதில் இந்தியா தலையிட வேண்டும் எனவும், ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறித்து இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் தரப்பில், இந்தியா தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தூதரகம் தரப்பில், ‛ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன், பிரதமர் மோடி பேசி அறிந்து கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.