ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி..!

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் சார்பில் பர்த்தொலொமேயு ஆட்டத்தின் 28 வது நிமிடத்திலும் ஜேவியர் சிவேரியோ ஆட்டத்தின் 87 வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் இறுதியில் 90+5 வது நிமிடத்தில் கேரளா அணி சார்பில் வின்சி ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஐதராபாத் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி 10 வெற்றியை பெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.