சுற்றுலா பயணிகளுக்கான தடைகளை நீக்கியது ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது. வருகிற 1-ந்தேதியில் இருந்து அவற்றை நீக்கியுள்ளன.
இதனால் இந்த 27 நாடுகளுக்கும் பணயம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், பயணம் மேற்கொள்வதற்கு 14 நாட்களுக்கு முன் தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதுமானது. ஆனால், 270 நாட்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இல்லையெனில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், 180 நாட்கள் முடிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளன.
பெற்றோருடன் வரும் ஐந்து வயதிற்குட்ட குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் மற்றும் கூடுதல் கவனம் என்று ஏதும் தேவையில்லை. உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அழித்துள்ள தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.