பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 111 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.தமிழகத்தில் மூன்று மாதங்களாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றாமல் உள்ளன இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.