இமாசலபிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து:;;
இமாசலபிரதேசம் உனா மாவட்டம் தஹ்லிவால் தொழில்துறை பகுதியின் பத்ரி கிராமம் அருகில் உள்ள குர்பாலாவில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசுகளை பெட்டியில் வைத்து பேக் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் ஆலை முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.