“பைடன் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா உறவு பலவீனமாகிவிட்டது!”- ட்ரம்ப் முன்னாள் அதிகாரி பேட்டி
அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியின் கடைசி சில வாரங்களில், அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளரின் தலைமை அதிகாரியாக இந்திய-அமெரிக்கரான காஷ் படேல் பணியாற்றியிருந்தார். காஷ் படேல் சமீபத்தில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய காஷ் படேல், “2024-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.
முன்னாள் அதிபர் ட்ரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே மதிப்புமிக்க உயர்ந்த உறவு இருந்தது. இவர்கள் இருவரும், இந்திய எல்லையில் மட்டுமல்லாமல், உலக அரங்கிலும் சீன ஆக்கிரமிப்பு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டனர். இதுமட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையிலான பொருளாதாரக் கட்டமைப்பை அனுமதிப்பது குறித்தும் இருவரும் அறிந்திருந்தனர். ஆனால், தற்போது ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு பலவீனமாகிவிட்டது” எனப் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.