உக்ரைன் பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் நாளை ரஷியா பயணம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) ரஷியாவுக்கு செல்கிறார். கடந்த 23 ஆண்டுகளில், பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கு பிறகு இப்போதுதான் பாகிஸ்தான் பிரதமர் ரஷியா செல்கிறார்.
இம்ரான்கானின் ரஷிய பயணத்தை உறுதிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், ரஷிய அதிபர் புதின் விடுத்த அழைப்பின் பேரில் இம்ரான்கான் ரஷியாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பயணத்தின்போது இம்ரான்கான் புதினை நேரில் சந்தித்து இருதரப்பு நலன்சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையே போர்பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இம்ரான்கானின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.