கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து !!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உணவகம் உள்ளிட்ட நான்கு கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம். இன்று அதிகாலை திடீரென உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவ தொடங்கியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.