கனடாவில் முடிவுக்கு வந்த தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் போராட்டம்
கனேடிய நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான தெருக்களில் அமைதி நிலவுகிறது…போராட்டத்தை மட்டும் கைவிடமாடோம் என சூழுறைத்த போராட்டக்காரர்களில் பெரும்பாலானாரை இப்போது அங்கே பார்க்கமுடியவில்லை. கலவரத் தடுப்புப் பொலிசார் அவர்களை துரத்தியடித்துவிட்டார்கள்.இருந்தாலும், போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றினாலும், அதன் தாக்கம் கனேடிய அரசியலில் பல ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லை தாண்டிச் செல்லும் ட்ரக் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் மீது கோபமும், கனடாவில் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்கள் வேறு பரவ, கனேடிய பிரதமருக்கு எதிரான வெறுப்பும் உருவானது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.