தூள் தூளான வாக்கு இயந்திரம்!!!
வாக்கு இயந்திரத்தை அடித்து நொறுக்கி, கட்சியின் ஒட்டுமொத்த இமேஜை டேமேஜ் செய்த திமுக பிரமுகருக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் போலீஸ் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று மாலை வாக்கு பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்கிற திமுக பிரமுகர் கத்தியோடு வந்து, வாக்கு பதிவு மையத்தில் புகுந்துள்ளார். தனது ஆட்களுடன் சேர்ந்து அங்கு இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தி ஓட்டுப் போட காத்திருந்த வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.