ஹிஜாப் விவகாரம்; தடையை மீறி போராட்டம் நடத்திய10 மாணவிகள்…
கர்நாடக மாநிலம் துமகூருவில் 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 மாணவிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அங்குள்ள அரசு ராணி ஜூனியர் பி யூ கல்லூரியில் பயிலும் 40 மாணவிகள் கடந்த புதன்கிழமையன்று பர்தா அணிந்து வந்ததால் உள்ளே அனுமதிக்கப்பட்டவில்லை. தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்காததை கண்டித்து முழக்கமிட்டபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் பேரணியாக நடந்து சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.