உங்க எலும்பெல்லாம் ரொம்ப பலவீனமா இருக்கா…
குளிர்காலம் துவங்கி விட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும். எலும்புகள் வலிமையின்றி போனால் அவை உங்களை பலவீனமைடயச் செய்யும். எலும்புகளின் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது உடலின் கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும். நாம் சாப்பிடும் பல உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏதும் இருப்பதில்லை. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ் வகைகளான முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மட்டுமின்றி சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், சோயா விதைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.