கிணற்றில் தவறி விழுந்த புலிக்குட்டி; வனத்துறை மீட்பு..
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் சுல்தான்பத்தேரி மந்தங்கொல்லி பகுதியில் பயன் இல்லாத பாழடைந்த கிணற்றில் இன்று காலை 6 மாதமான பெண் புலிக்குட்டி ஒன்று தவறி விழுந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றினுள் வலை விரித்து புலியை பிடித்தனர். பிடிக்கப்பட்ட புலியை பத்தேரி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.